1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (22:44 IST)

அமெரிக்காவின் 46- வது அதிபரானார் ''ஜோ பிடன் '' !! அதிகாரப்பூர்வ அறிவிப்பு... டிரம்ப் படுதோல்வி !!!

அமெரிக்க அதிபர்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 284 வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தன் தோல்வியை டிரம்ப் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை இதை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்லுவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், ஜோ பிடன் டிரம்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால் விரைவில் ஓட்டு எண்ணிக்கை இழுபறி தீர்ந்து, அதிபர் என்ற முடிவைக் காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்கா தேர்தலில் தேர்தல் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்த வேண்டுமென டிரம்ப் தொடர்ச்சியாக டுவீட் பதிவுட்டு வருவதால் டுவிட்டர் நிறுவனம் இதுபோல் கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுதியது.

இந்நிலையில் 284 வாக்குகள் பெற்று ஜோ பிடன்  அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்ரி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனவே ஜோ பிடன் 46 வது அதிபராக ஆட்சிப் பொறுப்பை ஏற்பவுள்ளார். எனவே மூன்று நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பின் இன்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துக் களம் கண்ட டிரம்ப் 214 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.