1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2020 (09:15 IST)

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர்: டிரம்ப் குறித்து ஜோபிடன்!

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர்:
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியை அதிபர் வேட்பாளர்கள் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அவர்கள் மின்னல் வேகத்தில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நேற்று நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’அமெரிக்காவின் மிக மிக மோசமான அதிபர் டிரம்ப் தான் என்றும் அவர் நிறவெறி மற்றும் வெறுப்பு நிறைவேறி வெறுப்பு மற்றும் அவற்றின் அடிப்படையிலான பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயன்ற ஒரே அமெரிக்க அதிபர் என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவில் மிக மோசமான அதிபர் என்று ஜோபிடன் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது: ‘கொரோனா விவகாரத்தில் ஜோ பிடன் சொல்வது எல்லாம் கேட்டு இருந்தால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள்  என்றும் H1N1 வைரஸ் விவகாரத்தை ஜோ பிடன் கையாண்ட விதம் என்பது மிகப்பெரிய பேரழிவு என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.