செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (10:37 IST)

அடுத்த அதிபர் தேர்தலிலும் கமலா ஹாரீஸ் போட்டியிடுவார்: ஜோபைடன் உறுதி!

அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டால் கமலா ஹாரீஸ் தான் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
 
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கும் துணை அதிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதனை மறுக்கும் விதமாக அடுத்த அமெரிக்க தேர்தலில் நான் போட்டியிட்டால் கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர் என்றும் அவர் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
 
இதனை அடுத்து அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் இடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது