1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (18:55 IST)

உபி தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி: பாஜக அறிவிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக சமாஜ்வாடி ஜனதா கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் பாஜக கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
 
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தல், நிஷாத் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட போவதாகவும், 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் அப்னா தல், நிஷாத் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளதை அடுத்து அந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.