1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (08:27 IST)

மாணவர்கள் கல்விக் கடன் ரத்து: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Joe Biden
அமெரிக்காவில் மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10,000 டாலர் வரையிலான கல்விக் கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்
 
மேலும் மாத வருமானத்தில் 10% கல்வி வரி வசூல் செய்யப்படுவதை 5 சதவீதமாக குறைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கு குடும்ப வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலரும் பெறுபவர்களுக்கு இந்த சலுகைகள் அனைத்தும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்