வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (12:59 IST)

130 இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவி! – அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களில் பலருக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை அதிபர் ஜோ பைடன் வழங்கியுள்ளார்.

இந்தியாவிலிருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா சென்று குடியேறியவர்களின் வாரிசுகள் இந்திய வம்சாவளிகளாக தொடர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் பல துறைகளில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

தற்போது அமெரிக்க அரசின் உயர்பதவிகளிலும் இந்திய வம்சாவளிகள் அதிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றன. இந்திய வம்சாவளிகள் அமெரிக்க அரசின் உயர்பதவிகளை பெறுவது இது புதியது அல்ல. முன்னதாக ஒபாமா அதிபராக இருந்தபோது 60 இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளில் இருந்தனர். இதுவே ட்ரம்ப்பின் ஆட்சி காலத்தில் 80 இந்திய வம்சாவளியினர் உயர்பதவியில் இருந்தனர்.

இந்த எண்ணிக்கை தற்போது ஜோ பைடனின் ஆட்சியில் 130 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் துணை முதல்வரான கமலா ஹாரிஸே இந்திய வம்சாவளிதான் என்பது குறிப்பிடத்தக்கது.