கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவச பீர்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு
உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடான அமெரிக்காவில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் அந்நாட்டில் பெரும்பாலானோரும் முதல் டோஸ் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆங்காங்கே உள்ள மாகாணங்களில் பல்வேறு பரிசு பொருட்கள் தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவச பீர் வழங்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். தடுப்பூசி பயனாளர்களை ஊக்குவிக்கவே ஜோ பைடன் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பல்வேறு பரிசு பொருள்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவச பீர் என்ற அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து அமெரிக்காவில் உள்ள பலர் தடுப்பூசி போடுவதற்கு முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன