1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:55 IST)

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப் நேருக்கு நேர் போட்டி..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது ஜோ பைடனும் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளதால் ஜோ பைடன் - ட்ரம்ப் நேருக்கு நேர் மோத உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் மீண்டும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸ் ஆகிய இருவரில் ஒருவர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் ஜோபைடன் இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டிட போவதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva