திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (10:45 IST)

தடுப்பூசி போட்டால் ரூ.7,000 ஊக்கத் தொகை: எங்கு தெரியுமா?

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டால் 100 டாலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

 
அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டால் 100 டாலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
 
தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளையும் அவர் அறிவித்திருக்கிறார். இதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் இதுவரை பாதிக்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக அரசு தரவுகள் கூறுகின்றன.
 
டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவி வருவதால் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக வெள்ளை மாளிகையில் பேசும்போது ஜோ பைடன் கூறினார். எனினும் தடுப்பூசி போட மறுப்பவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் பைடன் உறுதியளித்தார்.