பந்திக்கு முந்தி கொண்ட ஊழியரின் சம்பளம் கட்!

p
Last Modified வியாழன், 21 ஜூன் 2018 (19:39 IST)
ஜப்பானில் ஊழியர் ஒருவர் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக உணவு சாப்பிட்டத்தால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் பாதிநாள் சம்பளத்தை கட் செய்துள்ளார்.
 
ஜப்பான் நாட்டின் கோப் நகரில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய உணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்னதாக சென்றதால் அவருக்கு பாதிநாள் சம்பளம் கட் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்த செய்திகள் இணையதளத்தில் வேகமாக பரவியது. இதைக்கண்ட நபர்கள் பலரும் அந்நிறுவனத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர்.
a
 
இதனையடுத்து, அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இது போன்ற தவறுகள் இனி மேல் நடக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :