புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (16:02 IST)

எல்லாரும் ஒரு கப் பால் எக்ஸ்ட்ரா குடிங்க! – ஜப்பான் பிரதமர் வேண்டுகோள்!

ஜப்பான் மக்களை ஒரு கப் பால் அதிகமாக அருந்த சொல்லி அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

ஜப்பானில் பால் மற்றும் பால் பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையில் குளிர்காலங்களில் பால் பொருட்கள் விற்பனை குறைவதுடன், அவை வீணாய் போவதும் தொடர்கிறது. இந்நிலையில் இதுகுறித்து ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் தற்போதைய நிலவரப்படி 5,000 டன் பச்சை பால் வீணாகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதை தவிர்க்க வேண்டி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மக்கள் அனைவரும் தினம் ஒரு கப் பால் கூடுதலாக குடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். அதுபோல சமையலிலும் பால் பொருட்களை பயன்படுத்த அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் விழிப்புணர்வு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில் பால் வாங்குவதை ஊக்குவிக்க விடுமுறை காலங்களில் சலுகை விலையில் பால் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.