1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Japan old twins make guiness record

உலகின் மிகவும் வயதான இரட்டை சகோதரிகள்! – கின்னஸில் இடம்பெற்ற ஜப்பான் பாட்டிகள்!

Japan
உலகிலேயே மிகவும் வயதான இரட்டை சகோதரிகள் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர் இரண்டு பாட்டிகள்.

உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளுக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவது வழக்கமாக உள்ளது. சாதனைகள் மட்டுமல்லாமல் உலகிலேயே உயரமாக இருப்பது, குள்ளமாக இருப்பது, அதிக எடையுடன் இருப்பது போன்றவற்றிற்கும் கின்னஸ் புத்தகத்தில் இடமளிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த இரண்டு பாட்டிகள் உலகின் மிகவும் வயதான இரட்டையர்களாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். உமானோ சுமியமா மற்றும் கொடுமெ கொடாமா ஆகிய இந்த இரண்டு பாட்டிகளும் நவம்பர்5, 1913ல் ஜப்பானில் உள்ள ஷோடோ தீவில் பிறந்தவர்கள். தற்போது இருவருக்கும் 107 வயதாகும் நிலையில் அவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ரூ. 749 விலையில் ஆல் இன் ஒன் ரீசார்ஜ் சலுகை - ஜியோ அறிமுகம்