செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (19:42 IST)

முதல் விண்வெளி மனிதர் காலமானார்! – விஞ்ஞானிகள் அஞ்சலி!

முதன்முறையாக விண்வெளியில் நடந்த விண்வெளி வீரர் அலெக்சி லியானோவ் இன்று காலமானார்.

மனிதன் நிலவில் காலடி வைக்கும் முன்னர் விண்வெளிக்கு செல்வதே பெரும் சவாலாக இருந்தது. பனிப்போர் காலத்தில் ரஷ்யாவும், அமெரிக்காவும் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதில் முனைப்பாக இருந்தன. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பினாலும் யாரும் விண்கலனை விட்டு வெலியேறி விண்வெளியில் மிதந்தது கிடையாது.

இந்நிலையில் 1965ல் ரஷ்ய விண்வெளி திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு சென்றார் ரஷ்ய வான்படையின் ஜெனரலாக பதவி வகித்த அலெக்சி லியானோவ். அப்போது விண்கலத்திலிருந்து வெளியேறி தொடர்ந்து 12 நிமிடங்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தார் லியானோவ்.

விண்வெளியில் மனிதன் முதல்முதலாக மிதந்தது அப்போதுதான்! அப்படிப்பட்ட சாதனையை செய்த அலெக்சி லியானோவ் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு ரஷ்ய தலைவர்களும், விஞ்ஞானிகளும் தங்கள் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.