1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (11:07 IST)

Cordelia Cruise - கடலோர எல்லைக்குள் அனுமதி மறுத்த புதுச்சேரி!

புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு கடலோர எல்லைக்குள் அனுமதி அரசு அனுமதி வழங்காததால் திரும்பி சென்றது.

 
சென்னையிலிருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டத்தத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை வடிவமைத்தது. அதன்படி, சென்னை துறைமுகத்திலிருந்து 'எம்பிரஸ்' எனும் சொகுசு கப்பலை அறிமுகம் செய்து, அதை மக்களின் சொகுசு சுற்றுலா பயணத்துக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைத்தார்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்த சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்றுவிட்டு தற்போது புதுச்சேரிக்கு வந்தடைந்தது. சொகுசு கப்பல் புதுச்சேரி வருவது தொடர்பாக எந்த அனுமதியும் பெறவில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் சென்றுவிட்டு, விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை புதுச்சேரிக்கு வந்தடைந்தது. புதுச்சேரி வந்துள்ள சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி பெறாத காரணத்தினால் புதுச்சேரி கடலோர எல்லைக்குள் கப்பல் நிலைய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல் திரும்பி சென்றது.