செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (10:41 IST)

இவங்களையும் விட்டு வைக்கலயா..? மீம் கண்டெண்ட் ஆன இவாங்கா ட்ரம்ப்!

தனது புகைப்படங்களை வைத்து வெளியான மீம்ஸ்களை வரவேற்றுள்ளார்  இவான்கா டிரம்ப். 
 
கடந்த 24 ஆம் தேதி இந்தியா வந்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்திய சுற்றுப்பயணத்திற்கு மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னருடன் வந்திருந்தார் ட்ரம்ப். 
 
பின்னர் பட்டேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலை கண்டு ரசித்தனர். அப்போது பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டன. 
 
குறிப்பாக இவாங்கா டிரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மீம் கண்டெண்டாக மாறியது. வழக்கம்போல பலர் போட்டோவை தங்களுக்கு பிடித்த மாதிரி எடிட் செய்து அசத்தி இருந்தனர். இதில் சிலவற்றை இவாங்க தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.