1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (07:19 IST)

6ஆவது நாளாக தொடரும் போர்.. காசா பகுதியில் மின்சாரம் துண்டிப்பு..!

6ஆவது நாளாக தொடரும் போர்.. காசா பகுதியில் மின்சாரம் துண்டிப்பு..!
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் 6ஆவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் இந்த போர் காரணமாக இதுவரை 2000க்கும் அதிகமானோர் பேர் பலியாகி இருப்பதாகவும், பல ஆயிரம் பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இஸ்ரேல்      முற்றுகையால் காசா பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இஸ்ரேல் நாடு காசாவின் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பலர் ஐ.நா. நடத்தும் பள்ளி முகாம்களில் தஞ்சம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில்  காசாவின் நாடாளுமன்றத்தில் இருந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தினால், அரசு கட்டடங்கள் ராணுவ இலக்காகும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் போதிய நேரமில்லாததால் இலக்கைக் குறி வைக்கும் முன்பாக எச்சரிக்கை விடுப்பது சந்தேகமே என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva