1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (11:35 IST)

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் திடீர் கடத்தல்.. கப்பலில் என்ன இருந்தது?

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் திடீரென கடத்தப்பட்டதாகவும் அந்த கப்பலில் 20 டன் பாஸ்போரிக் அமிலம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  

இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான சென்ட்ரல் பார்க் என்ற கப்பல், சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனத்திடம் இருந்து  20 ஆயிரம் டன் பாஸ்போரிக் அமிலத்தை ஏற்றி சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த கப்பல் ஏடன் வளைகுடா வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆயுதம் ஏந்தி அந்த கப்பலை கடத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பாஸ்போரிக் அமிலம் இருந்ததாகவும், இவை  உரங்கள் தயாரிக்க பயன்படும் என்றும் கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 தற்போது இந்த கப்பலை மீட்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva