வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (12:24 IST)

தவறுதலாக எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. வருத்தம் தெரிவித்ததாக தகவல்..

இஸ்ரேலிய ராணுவம் தவறுதலாக எகிப்து ராணுவ எல்லையில் தாக்குதல் நடத்தியதாகவும்,  இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து வரும் நிலையில் இன்று இஸ்ரேல் தவறுதலாக எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
"கேரேம் ஷலோம் எல்லையையொட்டிய எகிப்து ராணுவ எல்லைப் பகுதியை நோக்கி தவறுதலாக பீரங்கி குண்டுகள் செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு  வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இந்த துயரமான சம்பவத்திற்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறோம்" என்று இஸ்ரேலிய பிரதமர் இயாரிட் லாபிட் கூறியுள்ளார்.
 
இந்த தாக்குதல் இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையேயான உறவுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தவறுதலான தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva