திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:02 IST)

காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 100க்கும் மேற்பட்ட அகதிகள் பலி..!

இஸ்ரவேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏற்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பாக ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக சுமார் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் இந்த போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், இன்னும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அது மட்டும் இன்றி ஈரான் நாடும், இஸ்ரேல் மீது போர் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கிழக்கு காசா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பள்ளியின் மீது இன்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
 
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பள்ளி தீவிரவாதிகள் நடமாடும் பகுதி என்பதால் தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறிய நிலையில் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran