இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி!!


Sugapriya Prakash| Last Modified சனி, 28 ஜனவரி 2017 (11:39 IST)
இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும், தங்கி இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றவும் அதிகாரம் அளிக்கும் புதிய உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டார்.

 

 
 
இந்த புதிய உத்தரவில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பாக வெளிப்படையான அறிக்கை அல்லது செய்திக்குறிப்பை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை.
 
இந்த சட்டம் மூலம், தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நிர்ணயிக்கப்படும் வரை, அந்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் அகதிகள் புணர்வாழ்வு திட்டம் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும். 
 
மேலும், அதிபரை தீர்மானிக்கும் வரை சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி இல்லை.
 
அதேவேளையில், அவர்கள் சுற்றுலா பயணிகளாக இருந்தாலும், குடியேறிகளாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகளான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து வர அமெரிக்காவுக்கு வர முயற்சிப்பவர்களுக்கு, விண்ணப்பித்த 30 நாட்கள் வரை விசா வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :