காபூல் மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல்! – பொறுப்பேற்ற ஐ.எஸ் அமைப்பு!
ஆப்கானிஸ்தானில் காபூல் மருத்துவமனையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வேறு பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்துவது தாலிபான்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் தற்கொலைபடையினர் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மற்றுமொரு பயங்கர அமைப்பான ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.