1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2018 (15:48 IST)

300 ஆண்டுக்கு முன் இறந்தவரை திருமணம் செய்த விநோத பெண்....

அயர்லாந்தில் பெண் ஒருவர் பேயை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமண்டா டீக் என்ற அந்த பெண் இளம் வயதில் இருந்தே கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார். 
 
இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு கடற்கொள்ளையன் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அந்த கடற்கொள்ளையன் 300 ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவன். மேலும், இருவரும் காதலித்துதான் திருமணம் செய்திக்கொண்டோம் என அந்த பெண் கூறியுள்ளார். 
 
ஆனால், இந்த திருமணத்தை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அந்த பெண் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த திருமணத்தை பதிவு செய்ய அரசு மறுத்துவிட்டது.
 
இது குறிந்த அந்த பெண் கூறியதாவது, நான் பேயுடன் வாழவில்லை. அவர் பேய் இல்லை. உலகில் இருக்கும் மற்ற தம்பதிகளைவிட எங்களது வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.