ஈரான் ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் அயன்டோம்.. புதிய தகவல்..!
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தாக்குதலை இஸ்ரேல் அயன்டோம் உதவியால் முறியடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே மிகுந்த பதற்றம் நிலவிய நிலையில், நேற்று இரவு திடீரென ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, இஸ்ரேல் தலைநகரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேல் நாட்டில் விழாமல், வானிலையே தடுத்து நிறுத்தும் அயன்டோம் இடைமறித்து அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தொடர்ந்து ஏவுகணைகள் செலுத்தினாலும், அயன்டோம் இரும்புக் கோட்டையாக இஸ்ரேலை காத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஈரான் எதிர்பார்த்த அளவிற்கு இஸ்ரேல் நாட்டில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும், இஸ்ரேல் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த தாக்குதலை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் இதுவரை 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ள போதிலும் அயன்டோம் என்ற பாதுகாப்பு கவசம் மூலம் இஸ்ரேல் நாட்டில் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'அயன்டோம் இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் இடையிலேயே துல்லியமாக சுட்டுத்தள்ளி அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், இஸ்ரேல் பெரும் அழிவிலிருந்து தப்பி வருகிறது. 'அயன்டோம் பல மைல் தொலைவில் உள்ளதையே கணித்து, துல்லியமாக ஏவுகணைகளை அழித்து இஸ்ரேல் நாட்டை முழுமையாக பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva