வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஜனவரி 2018 (20:54 IST)

எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்

வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது.

 
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. 
 
இதனால் பொருளாதார தடை படிப்படியாக விலக்கிக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. ஒபாமா ஆட்சிக்காலத்தில் செய்துக்கொண்ட இந்த ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
 
ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டுமானால் ஈரான் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ள பிழைகளை திருத்த வேண்டும் என்று வலியுறுத்து வருகிறார். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், தற்போது அல்லது இனி வரும் காலத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த ஒரு திருத்தம் செய்தாலும் அதை ஈரான் ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒப்பந்தத்துடன் பிற பிரச்சினைகளை ஒப்பிடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.