1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated: திங்கள், 19 செப்டம்பர் 2022 (20:27 IST)

அண்டார்டிகாவிலும் இண்டர்நெட்: எலான் மஸ்கின் நிறுவனம் செய்த சாதனை!

Elon Musk
அண்டார்டிகா கண்டத்தில் இணையதளம் கிடைக்க உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அவர்களின் நிறுவனம் முயற்சி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகின் ஏழு கண்டங்களில் அண்டார்டிக்காவில் மட்டும் தான் செயற்கைக்கோள் இணையவழி சேவை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அண்டார்டிகா கண்டத்திலும்  இணைய சேவை அளிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் கூறியபோது தற்போது அண்டார்டிகா உள்பட அனைத்து கண்டங்களிலும் ஸ்டார்லிங்க் இணையம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்
 
கடந்த வாரம் அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதியில் இன்டர்நெட் நிறுவுவதற்கான சோதனையில் எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார்லிங் நிறுவனம் ஈடுபட்டிருந்ததை அடுத்து தற்போது அண்டார்டிகாவில் இணைய சேவை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.