1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:23 IST)

இலங்கையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

Ranil Wickremesinghe
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வரும் 30 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடையால் சமீபத்தில் அந்த நாட்டில் புரட்சி ஏற்பட்டது. இதில். இலங்கை அதிபர் கோத்தபய வீட்டை மக்கள் சூறையாடினர். மகிந்த ராஜபக்சேவின் வீட்டை தீயிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து, கோத்தபய நாட்டை விட்டு தப்பியோடினார். அவரது சகோடர்களான, மஹிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே இருவரும் வரும் ஜூலை 28 வரை நாட்டை விட்டு செல்ல உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில், புதிய அதிபராக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே ,   நிதி நெருக்கடியால்  நாடு சிக்கியுள்ள நிலையிலும் வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள்தாக தகவல் வெளியாகிறது.

அதன் பின்னர், வரும் செல்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்தப் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும். இந்த இடைக்கால பட்ஜெட் இலங்கையில் சரிந்துள்ள பொருளாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு  நிவாரணம் வழங்கும் என ஆளுங்கட்சி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.