1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:53 IST)

மயமான 44 ஆண்டு பழமையான நீர்மூழ்கி கப்பல்... உள் இருந்த வீரர்களின் கதி என்ன?

இந்தோனேஷியாவில் கடற்படைக்கு சொந்தமான  நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது 53 வீரர்களுடன் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
44 ஆண்டுகள் பழமையான ஜெர்மெனிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு இந்தோனேஷிய கேஆர்ஐ நங்காலா 402 என பெயரிட்டது. இது, 1980 ஆம் ஆண்டில் இருந்து இந்தோனேஷிய கடற்படையில் சேவையாற்றி வருகிறது. 
 
சமீபத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் கடலில் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. இதில், மொத்தம் 53 பேர் இருந்தனர். பாலி தீவின் வடக்கே பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது கடலில் திடீரென நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது.
 
இதனை தொடர்ந்து கப்பலை தேடும் பணியில் ஒரு போர்க்கப்பல்கள் ஈடுப்பட்டுள்ளன. மேலும், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிடம் இருந்து நீர்மூழ்கி மீட்பு கப்பல் உதவியை இந்தோனேஷியா நாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.