திங்கள், 2 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 2 மார்ச் 2016 (19:26 IST)

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேஷியாவில் 7.9 ரிக்டேர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிற்கு 808 கி.மீ.க்கும் மேற்கே, 10 கிலோ மீட்டர் [6 மைல்] கடல் ஆழத்தில் 7.9 ரிக்டேர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு சுமத்ரா, வட சுமத்ரா மற்றும் ஏக் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஆனாலும் இந்த நிலநடுக்கம், இலங்கை, அந்தமான், இந்தியா உள்ளிட்ட பகுதிகளை தாக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 9.1 ஆக இருந்தது. அப்போது தாய்லாந்து உள்ளிட்ட டஜன் கணக்கான நாடுகளில் இருந்து சுமார் 2லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தோனேஷியா ’பசபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம்’ என்றே அழைக்கப்படுகிறது. ஏனென்றால், நிலப்பகுதிகளில் பூமித் தட்டுகள் மோதிக் கொள்வதால் அதிக பூகம்பம் ஏற்படுவதற்கு மண்டலமாக அது திகழ்ந்து வருகிறது. மேலும், எரிமலை வெடிப்புகளும் அதிக அளவில் அங்கு நிகழ்கிறது.