1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (16:58 IST)

மூழ்கும் தலைநகரம்; மொத்தமாக மாற்ற திட்டம்: சரிபட்டு வருமா?

இந்தோனேசியாவின் தலைநகராக இருக்கும் ஜகர்தாவை, அந்நாட்டு கைவிட இருப்பதாக முடிவு செய்து அந்நாட்டு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
ஆம், இந்தோனேசியா கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கி வருகிறது. கடந்த 10 வருடங்களில் 8 அடி வரை நிலப்பரப்பு கடலுக்குள் சென்றுவிட்டது. இப்படியே போனால், இன்னும் 6 வருடங்களில் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தா கடலுக்குள் சென்றுவிடும். 
 
அதாவது தற்போது இருக்கும் பிரதமர் அலுவலகம் வரை கடலுக்குள் சென்றுவிடும் என்று கணித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, வேறு வழி இல்லாமால் தலைநகரை மாற்ற முடிவெடுக்கபப்ட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமரும் அனுமதி அளித்துள்ளார். 
 
உலகில் சில நாடுகள் பல்வேறு பிரச்சனைகளால் தங்களது தலைநகரை மாற்றி இருக்கின்றன. பிரேசில், ஆஸ்திரேலியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் இதற்கு உதாரணம்.