தொடர்புடைய செய்திகள்
- நாடாளுமன்றம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லியில் பதட்டம்..!
- இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!
- பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!
- விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: கோபியில் செங்கோட்டையன் பேட்டி..!
- கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?
லிப்ஸ்டிக்கால் எழுதிய வெடிகுண்டு மிரட்டல் செய்தி.. விமான நிலையத்தில் பரபரப்பு..!
கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று இண்டிகோ விமானங்களுக்கு விடுக்கப்பட்ட அடுத்தடுத்த வெடிகுண்டு மிரட்டல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திப்ருகரில் இருந்து கொல்கத்தா வந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையில், லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் செய்தி கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாலை 7:37 மணியளவில் அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக, காலையில் ஷில்லாங் செல்லவிருந்த மற்றொரு இண்டிகோ விமானத்திலும் கையால் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் நான்கு மணி நேரம் தாமதமானது.
சோதனையில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. ஒரே நாளில் இருமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. லிப்ஸ்டிக்கால் மிரட்டல் விடுத்த நபர் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
