திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:36 IST)

ஆஸ்திரேலியாவின் இந்திய மாணவருக்கு கத்திக் குத்து...இனவெறி தாக்குதலா?

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் அவர் மீது கத்தியால் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்டி படித்து வந்தார் ஹூபம் கர்க்(28). இவர் சென்னை ஐஐடியில் பட்டம் முடித்த பின், மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

இந்த  நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இரவில் ஆஸ்திரேலியாவில் ஹூபம் சென்றபோது, அங்கு வந்த ஒரு நபர், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் கொடுக்க மறுத்த நிலையில், கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பின், ஷுபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இனவேறி காரணமாக தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj