1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (13:32 IST)

இந்திய தூதரகத்திற்கு தீ வைப்பு.. அமெரிக்கா கண்டனம்

America
அமெரிக்காவில்  காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதகரம் இயங்கி வருகிறது.

இத்தூதரகத்திற்கு கடந்த  2 ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியானது. தீ வைப்பு சம்பவ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது.

அதில், நள்ளிரவில் தூதரகத்தை  நபர் எரிபொருள் ஊற்றி எரித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. கடந்த 5 மாதங்களில் இந்திர தூதகரத்தின் மீது நடத்தப்பட்ட 2 வது தாக்குதல் இதுவாகும்.

இந்த செயலை அமெரிக்கா கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.