இந்தியா இன்னும் 1962 மனநிலையிலே இருக்கிறது: சீனா


dinesh| Last Modified செவ்வாய், 5 ஜூலை 2016 (14:05 IST)
என்.எஸ்.ஜி யில் சீனாவின் நிலைப்பாட்டை இந்தியா தவாறாக புரிந்து கொண்டுள்ளது. இந்தியா இன்னும் 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது, அதை மாற்றி கொள்ள வேண்டும்” என்று சீன ஊடகங்கள் கூறியுள்ளது.

 

மேலும் சீன ஊடகங்கள் இது பற்றி கூறுகையில், “என்.எஸ்.ஜி எனப்படும் அணு வினியோக குழுவில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்காததால், இந்திய ஊடகங்கள் சீன நாட்டை பழித்து எழுதுகிறது. அது தேவையற்றது, என்.எஸ்.ஜி குழுவில் ஒரு நாடு இடம் பெற வேண்டும் என்றால், அந்த நாடு அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்தியா இன்னும் அதில் கையெழுத்திடவில்லை. தவறை உங்கள்(இந்தியா) மீது வைத்துக்கொண்டு எங்களை(சீனா) குற்றவாளியாக்க முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம்” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :