திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (19:25 IST)

மூன்றாவது மனைவியும் பிரிந்துவிட்டாரா? இம்ரான்கானுக்கு தொடரும் சோகம்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், சமீபத்தில் புஷ்ரா மனேகா என்ற இளம்பெண்ணை 3வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 3வது மனைவி புஷ்ராவும் இம்ரான்கானை பிரிந்து சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இம்ரான்கான் வீட்டில் வளர்ப்பு நாய்கள் அதிகம் இருப்பதாகவும், இந்த நாய்களால் புஷ்ராவுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகவும், நாய்களை வீட்டை விட்டு விரட்டிவிட புஷ்ரா கூறியதற்கு இம்ரான்கான் மறுப்பு தெரிவித்ததாகவும் இதன் காரணமாக புஷ்ரா, தனது தாய்விட்டிற்கு சென்றுவிட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மேலும் புஷ்ராவின் முதல் கணவர் மூலம் பிறந்த மகன் அடிக்கடி தாயை பார்க்க வருவதும் இம்ரான்கானுக்கு பிடிக்கவில்லை என்றும், இதுவிஷயமாகவும் இருவரும் கருத்துவேறுபாடு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு திருமணத்தில் திருப்தி அடையாத இம்ரான்கான் 64 வயதில் செய்து கொண்ட 3வது திருமணமும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதால் அவர் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.