1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (15:14 IST)

போதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் போட்டுத்தள்ளிய மனைவி

நெல்லையில் போதையில் தகராறு செய்த கணவனை அவரது மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பூலாங்குளத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(42. இவரது மனைவி லட்சுமி (35). லட்சுமணன் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
 
இந்நிலையில் நேற்று லட்சுமணன் குடித்து விட்டு லட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி வீட்டிலிருந்த உலக்கையை எடுத்து, லட்சுமணன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், லட்சுமணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
போலீஸார் லட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கணவனை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.