திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (13:21 IST)

பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் ஆண்கள் தூண்டப்படுவார்கள்… பாக் பிரதமர் சர்ச்சை கருத்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெண்கள் அரைகுறை அணிந்தால் ஆண்கள் நிச்சயமாக தூண்டப்படுவார்கள் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் பாலியல் அத்துமீறல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆண்கள் சபலப்படுவதை தவிர்க்க, பெண்கள் தங்கள் உடல்பாகங்களை வெளிக்காட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்கள் நடக்காது எனப் பேசினார்.  கடந்த ஏப்ரல் மாதம் அவர் தெரிவித்த இந்த கருத்து சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது இம்ரான் கானின் முன்னாள் மனைவிகளே அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் அவர் இதே கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘இங்கு டிஸ்கோ போன்ற கேளிக்கை கிடையாது. இது ஒரு வித்தியாசமான வாழ்க்கை முறை. எனவே ஒரு அளவுக்கு மேல் ஆண்களின் உணர்ச்சிகளை பெண்கள் தூண்டினால் அவர்கள் எங்கு போய் ஆசையைத் தீர்த்துக் கொள்வார்கள். பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் ரோபோக்கள் மட்டுமே சபலப்பட மாட்டார்கள். அரைகுறை ஆடைகளை பார்த்திராத சமூகத்தில் நிச்சயமாக இவை தாக்கம் ஏற்படுத்தவே செய்யும்.’ எனக் கூறியுள்ளார்.