1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (17:29 IST)

ரூ.286 கோடி மதிப்பில் விலை உயர்ந்த பொருட்களை எடுத்த இம்ரான் கான் !

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார் இம்ரான் கான்.  
 
அந்த  நாட்டில் அரசியல் நெருக்கடி இருந்த நிலையில்,  கடந்த ஏப்ரலில் 10 ஆம் தேதி  பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது.  எனவே புதிய  பிரதமராக முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்நிலையில்,   இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில்,    வெளிநாட்டில் அவருக்கு  ரூ.18 கோடி மதிப்புள்ள  நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உத வியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு  நகைக் கடையில் விற்கப்பட்டதாகவும் புகார்  எழுந்தது.
 
இதுகுறித்து தேசிய  புலனாய்வு விசாரணை குழு  விசாரணை செய்து வருகிறது.
 
பிரதமர்  வெளி நாட்டில்  பரிசுப் பொருட்கள் பெற்றால் அதை      அரசுக் கருவூலகத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், இம்ரான் கான் அதை கருவூலத்திற்கு அனுப்பவில்லை என புகார் எழுந்துள்ளது.
 
அத்துடன் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை இம்ரான் எடுத்துச் சென்ருள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவருக்குப் பிடித்திருந்தால் அந்தப் பரிசுப் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தி கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கான விலை என்பது ஏல முறை நிர்ணயிக்கப்படும்.  ஆனால், இங்குள்ள விலை உயரிய பொருட்களை அவர் பணம் கொடுக்காமல் எடுத்துச் சென்றதாகவும் அதன் மதிப்பு ரூ.286 கோடி ரூபாய் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.