திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஜூலை 2018 (20:58 IST)

நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்சு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மஹ்மூத் பஷீர் ஒன்பதரை மாதங்களாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். கடந்த ஜுலை மூன்றாம் தேதியன்று விசாரணையை முடித்துக் கொண்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
 
இந்த வழக்கில் நவாஜ் ஷரீப், அவரது மகள் மரியம் நவாஸ், ஹசன் நவாஸ், ஹுசைன் நவாஸ் மற்றும் கேப்டன் ஷப்தர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ் ஆகிய இருவரையும் ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்துவிட்டது.
 
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒன்றே முக்கால் கோடி அபராதமும் விதித்துள்ளது.
 
அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியம் நவாசின் கணவர் கேப்டன் சப்தர் அவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று பாகிஸ்தானின் முன்னாள் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.