திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (21:44 IST)

டுவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்களின் பட்டியல்!

உலகின் முக்கிய  நிகழ்வுகள் குறித்து அறிய டுவிட்டரின் ஹேஸ்டேக் பார்த்தாலே போதும். அந்தளவும் உலக நடப்புகளில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சாதாரண மனிதர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரும், இந்த டுவிட்டர் தளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர்.
Obama

இதன் மூலம் எளிய மக்களும் சினிமா நடிகர்கள் முதற்கொண்டு, அதிகாரிகள், தலைவர்கள் வரை அனைவரிடம் எளிதில் தொடர்புகொள்ளலாம்.

இந்த நிலையில், உலகளவில் டுவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்களின் பட்டியலில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா  133.3 மில்லியன் ஃபாலோயர்ஸுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

டுவிட்டர்  நிறுவன அதிபர் எலான் மஸ் 115.9 மில்லியன் பேரும், ஜஸ்டின் பைபரை 113.7 மில்லியன் பேரும், பாப் பாடகி கேட்டி பெர்ரியை 108.8 பேரும் ஃபாலை செய்கின்றனர்.

மேலும், கால்பந்து நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ 104.8 மில்லியன் ஃபாலோயர்ஸுடன் 6 வது இடம் பிடித்துள்ளார்.

Edited by Sinoj