செவ்வாய், 29 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (16:39 IST)

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும் என டிரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்க அதிபர் தேர்தல்  நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்  இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதை அடுத்து,  ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிட்டு உள்ளார்.
 
அவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களத்தில் உள்ளார்.  இருவருக்கும் இடையே நேரடி விவாதங்கள் நடைபெற்ற நிலையில், கமலா அரிசிக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் அமெரிக்க தேர்தலில் 40 சதவீதம் ஜீவர்கள் வாக்குகள் உள்ளன என்றும் அவர்களது வாக்குகள் மட்டும் எனக்கு போதாது என்றும் கூடுதல் வாக்குகள் வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் நான் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

ஈரான் அணு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவார்கள் என்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல் அவிவ், ஜெரசேலம் ஆகிய பகுதிகள் போர் மண்டலங்களாக மாறும்  என தெரிவித்துள்ளார். 

 
நாட்டில் உள்ள யூதர்கள் மீது கமலா ஹாரிஸ் வெறுப்பு கொண்டு உள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.