டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. அமெரிக்க இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?
பிரதமர் மோடி செப்டம்பர் 21ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அங்கு, அவர் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் டிரம்ப்பை சந்திக்கிறார். எப்போது, எங்கு இந்த சந்திப்பு நடைபெறும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ட்ரம்ப்-மோடி சந்திப்பு காரணமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது.
Edited by Siva