திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (16:57 IST)

’’அமெரிக்க அதிபரின் கீழ் வேலை செய்ய மாட்டேன்’’ - நாசா தலைமை நிர்வாகி ராஜினாமா !

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில் ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். விரைவில் அவர் பதவியேற்கவுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.

முன்னாள் அதிபர் தோல்வியைத் தழுவினாலும் அதை ஏற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை.

மீண்டும் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் டிரம்ப் பிடிவாதமாக உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் விண்வெளி அமைப்பான நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிலையில் அவர்  ராஜினாமா செய்வததை யாரும் விரும்பவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அவர் தனது முடிவில் உறுதியாகவுள்ளார்.

மேலும்,மனிதர்களைச் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் திட்டங்களுக்கு ஜிம் பிரிடென்ஸ்டைன் உதவி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.