வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (12:30 IST)

இஸ்ரேலுக்காக போர்களம் போகவும் தயங்க மாட்டேன்! – பிரபல நடிகை அறிவிப்பு!

Rona lee shimmon
இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான போரில் தேவைப்பட்டால் ராணுவத்தில் சேர தயாராக உள்ளதாக இஸ்ரேல் நாட்டு நடிகை தெரிவித்துள்ளார்.



இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள சூழலில் இஸ்ரேல் காசா பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த தாக்குதலால் ஏராளமான பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் தேவைப்பட்டால் இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்து போர் செய்யவும் தயாராக உள்ளதாக இஸ்ரேலிய நடிகை ரோனோ ஷீ மோன் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “இஸ்ரேலை ஹமாஸ் அமைப்பு தாக்கியது கண்டனத்திற்குரியது. ஹமாசுக்கு எதிராக போராட இஸ்ரேல் ராணுவத்தில் சேரவும் நான் தயாராக உள்ளேன். அப்பாவி மக்களின் உயிரிழப்பை பார்த்து கொதித்து போய்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் அமைப்பை கண்டித்து எங்களுடன் துணை நின்ற இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டிடம் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் இஸ்ரேல் போர் காரணமாக இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K