ஹ்ரித்திக் ரோஷன் படம் பார்த்த மனைவி கொலை: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் ஹ்ரித்தி ரோஷன் படம் பார்த்ததற்காக மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் வந்து வந்த இந்தியர் தினேஷ்வர் புதிதட். இவருக்கும் டோன் டோஜாய் என்ற பெண்ணுக்கும் சில மாதங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது. டோன் டோஜோய் இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு பெரிய ரசிகையாக இருந்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.
தன் மனைவி தன்னை விட ஒரு நடிகருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தினேஷ்வருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை, சச்சரவில் ஈடுப்பட்டுள்ளார். இதுகுறித்து டோஜாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிறகு இருவருக்கும் இடையே சமாதானம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு தன் மனைவி ஹ்ரித்திக்ரோஷன் படங்கள் பார்ப்பதை தடுப்பதில்லை என தினேஷ்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால் திடீரென மனைவியை கொலை செய்த தினேஷ்வர் தானும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நியூயார்க் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.