1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2017 (13:17 IST)

மனைவியை கார் முன் கட்டிவைத்து ஜாலியாக சுற்றிய கணவன்

காரின் முன் பக்கத்தில் மனைவியை கட்டிவைத்து கணவன் காரை வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஈரானில் கணவனுக்கும் மனைக்கும் ஏற்பட்ட சண்டையில் மனைவிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கணவன் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி இருவருடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு தண்டைனை கொடுக்கும் விதமாக வினோத செயலில் ஈடுபட்டார்.
 
மனைவியை காரின் முன் பக்கத்தில் கட்டிவைத்து, காரை சாலையில் மிக வேகமாக ஓட்டிச் சென்றார். காரில் முன்பக்கத்தில் தொங்கியபடி இருந்த பெண் பாதியில் வழியில் கிழே விழுந்து படுகாயம் அடைந்தார். தற்போது அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

நன்றி: Amazing Video Clip