புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (12:10 IST)

அமெரிக்காவை நெருங்கும் அதிபயங்கர ‘மில்டன்’ சூறாவளி! ப்ளோரிடாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!

Milton Hurricane

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிபயங்கர சூறாவளி காரணமாக மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

 

 

அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான சூறாவளிக்கு மில்டன்(Milton Hurricane) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மில்டன் சூறாவளி வேகமாக வலுவடைந்து ‘வகைமை-5’ பயங்கர சூறாவளியாக மாறியுள்ளது. இது மெக்சிகோ வளைகுடாவின் அண்மையில் உள்ள ப்ளோரிடா மாகாணத்தின் மத்திய பகுதியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

 

வகைமை 5 சூறாவளி என்பதால் அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் ஃப்ளோரிடாவிலிருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஃப்ளோரிடா சாலைகளில் ஏராளமான வாகனங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தி டம்பா பே சர்வதேச விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K