வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (14:27 IST)

மனிதனின் மூக்கில் நூற்றுக்கணக்கான பூச்சிகள்- மருத்துவர் அதிர்ச்சி

bugs
உலகில் மனிதர்கள் பலர் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலருக்கு இதெப்படி நடந்தது என்று அவர்களுக்கு தெரியாமல் சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு.
 
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபரின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதுகுறித்து மருத்துவரிடம் சென்று கேட்டபோது, அவர் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூக்கி ரத்தம் வழிந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.
 
அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள்  இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
அதன்பின், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த வண்டுகளை அகற்றிய மருத்துவர், அவரிடம்,சுற்றுச்சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகிறது.