ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (10:58 IST)

நடுவானில் விமானத்தில் ஆபாசப்படம்.. 1 மணி நேரம் நிற்காமல் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி!

Flight

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் ஸ்கிப் செய்ய முடியாதபடி ஆபாச படம் ஓடியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

 

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து ஜப்பானில் உள்ள ஹனேடாவிற்கு கடந்த வாரம் கண்டாஸ் (Qantas Airlines) க்யூஎஃப்59 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. சற்று தாமதமாக சென்ற அந்த விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்தபோது பயணிகள் முன்னால் உள்ள திரையில் திடீரென ஆபாசப்படம் ஓடத் தொடங்கியுள்ளது.

 

பொதுவாக பயணிகள் முன்னால் உள்ள திரை பயணிகள் வசதிக்கேற்ப படங்களை தேர்வு செய்து பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் அனைத்து திரைகளிலும் ஆபாச படம் ஓடியுள்ளது. சில பயணிகள் அதை நிறுத்த முயற்சித்தபோது தொடுதிரை சரியாக செயல்படவில்லை.

 

இதனால் விமானம் ஜப்பான் சென்று இறங்கும் வரை சுமார் 1 மணி நேரம் ஆபாசப்படத்தை பார்க்க வேண்டிய சூழல் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே இந்த கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. எண்டெர்டெயின்மெண்ட் சிஸ்டம் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக விமான ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு கண்டாஸ் (Qantas Airlines) மன்னிப்பு கேட்டுள்ளது.

 

Edit by Prasanth.K