செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வது சாத்தியமா??
செவ்வாய் கிரத்தில் மனிதர்களின் வாழ்வாதாரம் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்மறையான கருத்து ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வது மிகவும் கடினம் என ரஷ்ய விஞ்ஞானி எவ்ஜினி நிகாலோங் கருத்து வெளியிட்டுள்ளார்.
மாஸ்கோவில் உள்ள இயற்பியல் தொழில்நுட்ப கல்வி மையத்தில் பேராசிரியரான் இவர், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வது தொடர்பான ஆய்வை செய்து வருகிறார்.
இவரது ஆய்வின் முடிவில், மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் அவனது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவன் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என எச்சரித்துள்ளார்.
அதோடு, பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மனிதனின் உடல் செயல்படுவதால், இந்த ஈர்ப்பு விசைக்கு ஏற்ற மாதிரி நோய் எதிர்ப்பு சக்திகளும் உருவாகின்றன.
செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி பூமியை போன்று இல்லாமல் வேறு மாதிரி இருக்கும். எனவே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து விடும்.
விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லை. விண்வெளி ஓடத்தில் 6 மாதம் வரை தங்கி இருந்த 18 ரஷிய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருந்தது என தெரிவித்துள்ளார்.