மனித இனம் விரைவில் அழிந்துவிடும்: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை
தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தை விரைவில் அழித்து விடும் என பிரபல வானியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
பருவநிலை மாற்றம், விண்கல் தாக்குதல், மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மனித இனம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் மனித இனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
மனித இனத்தின் மூர்க்கமான உள்ளுணர்வுகள், அதீத வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, பயோ வார் போன்றவை மனித இனத்தை அழிக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தொடர்ந்து எந்திரங்களைச் சார்ந்திருக்கும் மனித இனம் உயிர் பிழைத்து இருப்பதற்கான அடிப்படைத் திறன்களை இழந்து விடும், என்று தெரிவித்துள்ளார்.